Sunday, May 17, 2009

முகவை IDMK ஆதரவு வேட்பாளர் திரு. ரித்தீஷ் அவர்கள் வெற்றி

திரு. ரித்தீஷ் (எ) சிவக்குமார் M.P அவர்கள்

ராமநாதபுரம் தொகுதியில்
தி.மு.க.வேட்பாளர் ரித்திஷ் வெற்றி

ராமநாதபுரம்,மே.17- .
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை

பாராளுமன்ற தேர்தல் அறி விப்பு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 68.7 ச தவீத வாக்குகள் பதிவாகியது. இதற்கான வாக்குஎண்ணிக்கை நேற்று ராமநாதபுரம் செய்யதம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான வாசுகி முன்னிலையில் தொகுதிவாரியாக தனி அறையில் சீல் வைக்கப்பட்டு இருந்த வாக்குபதிவு எந்திரங்கள் அந்ததந்த தொகுதி வாக்குகள் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ராமநாதபுரம்,திருவாடானைசட்டசபை தொகுதிக் கான வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தரைத் தளத்திலும்,திருச்சுழி,அறந் தாங்கிதொகுதி வாக்குஎண் ணிக்கை மேற்குபகுதியில்உள்ள தரைத்தளத்திலும், பரமக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் மாடியில்கிழக்குபகுயிலும், முதுகுளத் தூர் தொகுதி வாக்குஎண் ணிக்கை முதல் மாடியில் மேற்கு பகுதியிலும் நடந்தது.வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொருசட்ட மன்றதொகுதிக்கும் 12 மேஜைகள் வீதம் 72 மேஜைகள்அமைக்கப்பட்டு ள்ளன. ஒவ்வொரு மேஜைக் கும் ஒரு மேற்பார் வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார் வையாளர் வீதம் மொத்தம் 216 அரசுஅலுவ லர்கள் வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட்டனர்.

வாக்குஎண்ணிகை மையத்துக்குள்வேட்பா ளர்கள், அனுமதி பெற்ற அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தைசுற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில்ஏராள மான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
தி.மு.க.வெற்றி

வாக்கு எண்ணிக்கை மொத்தம் 27 சுற்றுகள் நடந்தது. இதன் முடிவில் தி.மு.க.வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் அவர்களுக்கு திரு. ரித்தீஸ் அவர்கள் பொன்னாடை அனிவிக்கிறார். அருகில் தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி, அமைச்சர் சு.ப. தங்கவேலன், திருமதி. பவானி எம்.பி , திரு. ரகுமான்கான் ஆகியோர்

மொத்தவாக்குகள் -11,30,489

பதிவானவை - 7,75,461

தபால்ஓட்டு - 2,378

செல்லாதவை - 499

ஜே.கே.ரித்திஷ்(தி.மு.க.வெற்றி)- 2,94,945

வ.சத்திய மூர்த்தி(அ.தி.மு.க.) - 2,25,030

சு.திருநாவுக்கரசர்(பா.ஜ.க.) - 1,28,322

சிங்கைஜின்னா (தே.மு.தி.க.) - 49,571

பிரிசில்லாபாண்டியன்(ப.சமாஜ்)- 39,086

சலிமுல்லாகான்(ம.ம.க.) - 21,439

முகமதுஅபிதலி(ஜா.மு.மோ) - 1,496

ஜகாங்கீர்(சுயேட்சை) - 5,872

முருகேந்திரன்(சுயே) - 3470

பாஸ்கரன் (சுயே) -2329

காளிமுத்து(சுயே) -1769

பாலமுருகன்(சுயே) -1244

செல்லதுரை(சுயே) - 1186

சண்முகையாபாண்டியன்(சுயே) -1119

சுவார்ட்ஸ்துரை (சுயே) - 961


பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ரித்திசுக்கு தேர்தல் அதிகாரி வாசுகி சான்றிதழை வழங்கினார். அப்போது வேட்பாளர் ரித்திசை அமைச்சர் சுப.தங்கவேலன்,எம்.எல்.ஏ.க்கள்அசன்அலி, முருகவேல்,ராம்பிரபு,உதயம்சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், நகர்தி.மு.க.செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், ïனியன் தலைவர்கள் திவாகரன், நல்லசேதுபதி, எம்எ.சேக், பெருநாழிபோஸ்,மாவட்டதுணை செயலாளர் அகமதுதம்பி, ராமர்,திசை வீரன், சேது கருணாநிதி, துரைச்சாமி, நாகநாதசேதுபதி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் வாழ்த்தினர்.
செய்தி நன்றி : தினத்தந்தி

Saturday, May 9, 2009

IDMK யின் தி.மு.க ஆதரவு பிரசுரம்

தி.மு.க வேட்பாளர் திரு. ரித்தீஷ் அவர்களை ஆதரித்து இந்திய தேசிய மக்கள் கட்சி வெளியிட்டுள்ள ஆதரவு பிரசுரம்.பெரிதாக்கி படிப்பதற்கு அதன் மேல் சொடுக்கவும்.
பக்கம் - 01



பக்கம் - 02

Friday, May 8, 2009

திரு. மேலை நாசருடன் தி.மு.க ஆதரவு பிரச்சாரத்தில்

மத்திய சென்னை வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் அவர்களை அழைத்து வருகையில்



திரு. தயாநிதி மாறன் அவர்களோடு ஆலோசனையில் திரு. மேலை நாசர்

தி.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணிக்காக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் ஐக
பேரவை திரு. மேலை நாசர் அவர்களும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L(9894262100)திரு. முகவைத்தமிழன் (9047507665) ஆகியோர் தமிழகத்தின் முக்கிய தொகுதிக் எங்கும் பிரச்சாரததில் ஈடுபட்டுள்ளனர்.

திரு. மேலை நாசர் அவர்களோடு திரு. அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர்.

நேற்றைய தினம் தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. ஜே.எம். ஆரூன் அவர்களுக்காக 3 நாள் பிரச்சாரத்தை முடித்து கொண்டு இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஷ் அவர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த திரு. மேலை நாசர் அவர்களும், திரு. அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர் வேட்பாளர் திரு. ரித்தீஷ் அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெறிவித்தனர்.

இராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளர் திரு. ரித்தீஷ் அவர்களோடு பிரச்சாரத்தின்போது.

திரு. இரகுமான்கான் அவர்களுடனான சந்திப்பின்போது, திரு. முகவைத்தமிழன், திரு. மேலை நாசர், திரு. அக்பர் ராஜா ஆகியோர்.

அதன் பின்னர் மாலையில் முன்னால் அமைச்சரும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க தேர்தல் கண்காணிப்பாளருமான திரு. ரகுமான்கான் அவர்களை சந்தித்து பேசினர். திரு. ரகுமான்கான் அவர்களின் வேண்டுதலுக்கு இனங்க போகளுர் ஒன்றியம், பரமக்குடி, சாயல்குடி, மேலக்கொடுமளுர், நரிப்பையூர், போன்ற இடங்களில் ஜமாத்துகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.பிரச்சாரத்தின்போது . அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பின்னர் சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவருமான திரு. திருமாவளவன் அவர்களின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக திரு. மேலை நாசர் அவர்களின் சிறிய பிரச்சார உரை ஒன்று பதிவு செய்யப்பட்டது. திரு. திருமாவளவன் அவர்களின் அழைப்பிற்கினங்க சிதம்பரம் தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்திற்கு வருவதாக தெறிவிக்கப்பட்டது.

Monday, May 4, 2009

திரு. இரகுமான்கானுடன் சந்திப்பு


இராமநாதபுரம் மே. 05, தி.மு.க வின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் கண்காணிப்பாளரும் முன்னால் அமைச்சருமான திரு. ரஹ்மான்கான் அவர்கள் தேர்தல் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர். திரு. அக்பர் ராஜா B.A.B.L மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. முகவைத்தமிழன் ஆகியோரை நேற்று இராமநாதபுரத்தில் உள்ள இராஜ இராஜேஸ்வரி டவரில் சந்தித்து கலந்ரையாடினார்.

இந்த தேர்தலில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பரப்புரைகள் குறித்தும், மாவட்டம் முழுவதும் ஒன்றிய ரீதியாக இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி, அவற்றை தி.மு.க விற்கு ஆதரவாக திரப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் திரு. இரகுமான் கான் அவர்கள் அறந்தாங்கி, திருவாடானை பகுதிகளில் பிரச்சாரத்தை சற்று கடுமையாக்க கோரினார், மற்றும் பிரச்சாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் தீவிர செயல்பாடுகள் குறித்து தி.மு.க தலைமையிடம் எடுத்து கூறுவதாகவும் கூறினார். I.D.M.K மாவட்ட தலைவர் வழக்கறிஞர். திரு. அக்பர் ராஜா B.A.B.L மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. முகவைத்தமிழன் ஆகியோருக்கு தனது பாராட்டுக்களையும் வாழத்துக்களையும் தெறிவித்து கொண்டார்.

Tuesday, April 28, 2009

பொது அறிவிப்பு - இந்திய தேசிய மக்கள் கட்சி

இந்த அறிவிப்பை பெரிதாக்கி வாசி்ப்பதற்கு புகைப்படத்தின் மேல் சொடுக்கவும்

Sunday, April 26, 2009

ஏன் முஸ்லிம்கள் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?

ஏன் இஸ்லாமியர்கள் தி.மு.க விற்கு வாக்களிக்க வேண்டும் ?

• 1960 முதல் தி.மு.க ஆட்சியமைத்த காலத்தில் இருந்து ஒவ்வொரு தி.மு.க ஆட்சியின் போதும் ஏனைய ஆட்சிகளில் மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டது.

• இஸ்லாமியர்கள் கல்வி அறிவு பெற்று வேலை வாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் ஏனைய சமூகத்தினரை போல் முன்னேற வேண்டும் என்ற காரனத்தினால் டாக்டர் கலைஞர் அவர்கள் 1960 ல் தான் ஆட்சியமைத்தவுடன் இஸ்லாமிய சமூகத்தினருக்காக முதலில் மதுரையில் வக்பு வாரிய கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார். பின்னர் அது பத்தாது என்று சென்னையில் கலைஞரின் அரசியல் குரு காயிதே மில்லத் பெயரில் கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார்.

• உருது மொழி பேசக் கூடிய சிறுபான்மையின மக்களுக்காக உருது அக்காடமி அமைத்து தந்தார் தமிழினக் காவலர் கலைஞர்; அவர்கள்.

• 1990 முதல் முஸ்லிம் சமுதாயத்தினரை குறிவைத்து ஜெயலலிதாவாலும் மதவெறி பா.ஜ.க வாலும் போடப்பட்ட ஆயிரக்கணக்கான தடா மற்றும் பொடா வழக்குகளை விடுதலை செய்து அவற்றை சாதாரன வழக்குகளாக மாற்றி தடா சட்டத்தை ரத்து செய்ய வைத்தார்.

• ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் என்ற அகம்பாவத்தில் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையான வக்பு வாரியத்திற்கு முஸ்லிமை நியமிக்காமல் ஒரு முஸ்லிம் அல்லாத நபரை அமைச்சராக நியமித்தது. ஆதை மாற்றி டாக்டர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சியில் இரன்டு முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி அளித்து ஒரு முஸ்லிமை வாரியத் தவைராக ஆக்கியது.

• முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 மூ இட ஒதுக்கீடு. மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியது.

• உலமாக்கள் நல வாரியம் அமைத்து உலமா பெருமக்களின் நீண்ட கால அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

• பி.ஜே.பியின் நீண்ட நாள் கணவான பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெறிவித்து அதை வராமல் தடுத்து நிறுத்தியது.

• ஜெயலலிதாவால் முதல் முறையாக சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக புகுத்தப்பட்ட 'தலித் முஸ்லிம் என்ற வாசகத்தை நீக்கியது.

• ஏழை சிறுபான்மை குடும்பங்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கேஸ் அடுப்பு, தொலைக்காட்சி பெட்டி முதலியவற்றை இலவசமாக வழங்கியது.

• ஏழை விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ஒரு ரூபாயில் அரிசி, சிறுபான்மை மானவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் என வழங்கியது. இலவசமாக முஸ்லிம் மாணவர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் கல்வி திட்டம்.

• அப்பாவி ஊனமுற்ற சிறைவாசியான மதானிக்கு ஜெயலலிதாவால் மறுக்கப்பட்டு வந்த அவரது நோய்க்கான சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட காரனத்தால் முஸ்லிம் அதிகாரி என்ற ஒரே காரனத்தல் உள்துறை செயலாளராக இருந்த முனீர் ஹோடாவை தேச துரோக குற்றம் சாட்டி ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். கலைஞர்; ஆடசிக்கு வந்தவுடன் முதல் காரியமாக முனீர் ஹோடாவின் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பதவியில் அமர்த்தி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியது.
ஏன் சிறுபான்மை இனத்தவர்கள் இந்த தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?

• முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சிறுபான்மை சமுதாயத்தினர் வாக்களித்தால் ஏறத்தாள நமது சமுதாயத்தின் 185,000 வாக்குகள் பிறிந்து போகும் அதனால் மிக எளிதாக பி.ஜே.பி (B.J.P) மற்ற சமூக ஆதரவுடன் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. (செட்டியார், நாடர், அகமுடையார் என பல சங்கங்கள் பி.ஜே.பி க்கு ஆதரவு தெறிவித்துள்ளன)

• தி.மு.க வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் ஜாதி, மத பேதமற்ற ஒரு சிறந்த மனிதராவார். இது வரை அவர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட்டதாக எந்த ஒரு ஆதாரமான தகவல்களும் இல்லை. திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் நமது சமுதாய மக்கள் மீது அளப்பாறிய பாசமும், அன்பும், மறியாதையும் கொண்ட கண்னியமான நபர்.

• மற்றவர்களுக்கு வாக்களித்தால் நமது மாவட்டத்தின் வாழ்வாதார திட்டமான சேது சமுத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டு நம் மாவட்டம் மீண்டும் வறுமை மாவட்டமாக்கப்படும்.

முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அதன் மூலம் மதவாத பா.ஜ.க (B.J.P) ஆட்சிக்கு வந்தால் நமது மாவட்டம் 'ராமர் பாலம் பெயரால் மதக்கலவரங்களை தோற்றுவித்து குஜராத்தை போல் சிறுபான்மை மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகும் அபாயம்.

• பா.ஜ.க முன்வைத்துள்ள ஹிந்துத்துவம் எனும் செல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச் சார்பின்மைக்கும், அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரானதாகும். நீங்கள் இந்த தேர்தலில் மட்டும் நமது தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த செயல் திட்டத்தை செயல் படுத்தும் பா.ஜ.க வின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றீர்கள்.

• இராமநாதபுரம் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க வின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிந்திப்பீர்!! கலைஞர் அவர்கள் தான்' நமது சமுதாயத்திற்கு 4 எம்.பி சீட்டுகளுக்கும் மேல (10%); வழங்க முன்வந்தார்கள் (காங்கிரஸ் -1 மு.லீக் -1 தமுமுக -1 மாநிலங்களவை – 1 (ரஹ்மான்கான்) ) ஆனால் ஒட்டுமாத்த 4 சீட்டும் தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு சமுதாயத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு இன்று உங்களிடம் கலைஞர் துரோகி என்கிறார்கள். சுற்று சிந்திப்பீர் சமுதாய நல்லுள்ளங்களே! கலைஞரா துரோகி? யார் துரோகிகள் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வாக்குகளை நமது வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு வழங்குங்கள்.

• இது சட்டமன்ற தேர்தல் அல்ல! பாராளுமன்ற தேர்தல்!! சுpந்தியுங்கள் யார் ஆட்சி வேண்டும் நமக்கு? பாபர் பள்ளியை இடித்து, நமது சமூகத்திற்கு தீவஜரவாத முத்திரை குத்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியா? ஆல்லது மதச்சார்பற்ற காங்கிரஸ் ஆட்சியா? சுpந்திப்பீர் செயல்படுவீர்.

நமது சமுதாய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாரி வழங்குவீர்.


இவன்
அக்பர் ராஜா B.A.B.L
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
தொடர்புக்கு : 9047507665 - 9894262100 - 9865252519

இந்திய தேசிய மக்கள் கட்சி
மாவட்ட தலைமையகம்
66, திருச்சி ரோடு
கேணிக்கரை, இராமநாதபுரம்
தொலைபேசி : 04567 - 221545

Friday, April 24, 2009

இந்திய தேசிய மக்கள் கட்சி தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் அவர்களுக்கு வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்கள் பொன்னாடை அனிவிக்கிறார். அருகில் தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி, அமைச்சர் சு.ப. தங்கவேலன், திருமதி. பவானி எம்.பி ஆகியோர்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) யின் இராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள அதன் மாவட்ட அலுவலகத்தில் 15 வது மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்காக இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றக் குழு மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L தலைமை வகித்தார் அதன் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் முன்னிலை வகித்தார்.


பத்திரிகையாளர் சந்திப்பில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ஜாஃபர் ஆகியோர்.

கூட்டத்தின் முடிவில் பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்கேற்ப இந்த 15 வது மக்களவைத் தேர்தலில் சமுதாய நலன் கருதியும், மதவாத கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவும், சிறுபான்மை சமுதாயத்திற்கு சமூக நீதி கிடைத்திட வேண்டியும் திராவிட முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவளித்து அவர்களை வெற்றி பெறச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இப்பகுதி மக்களின் வாழ்வாதார திட்டமான சேது சமுததிர திட்டம் தடையின்றி நிறைவேற்றிடவும், கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் நிறைவேற்றப்படவும், மீனவர்களின் பாதுகாப்புக்காவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் நடிகர் ரி்த்தீஸ் என்ற சிவக்குமாரை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைப்பதெனெ முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தின் நிறைவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவை பாலா அவர்கள் நன்றி கூறினார்.


இப்படிக்கு

வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
இராமநாதபுரம்
தொலைபேசி : 9894262100

Template by - Abdul Munir - 2008 - layout4all