இன்னும் என்ன தயக்கம்??
மும்பை-மலேகான் முஸ்லிம்களின்
அரசியல் வெற்றியைப் பாருங்கள்
வன்முறைகளும், தாதாக்களின் கட்ட பஞ்சாயத்துக்களும், அடிதடிகளும், வதந்திகளும் புரளும் பூமி மும்பாய் மாநகரம். அச்சத்தோடும், மிரட்சியோடும், முஸ்லிம்கள் வாழும் ஊர். சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க யாரோ செய்கின்ற தவறான செயலுக்கு அப்பாவி முஸ்லிம்கள் அலக்கழிக்கப்படுவதுண்டு. ஆறு வற்றும் போது மழை நினைவுக்கு வருவதைப் போன்று தேர்தல் வந்தால் முஸ்லிம்கள் நினைக்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும் உண்டு. இந்த இழிநிலைக்கு மலேகான் முஸ்லிம்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். நகராட்சி தேர்தலில் இந்திய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி (ஐஆஊP) என்ற அரசியல் கட்சியை கடந்த ஓரிரு மாதங்களில் தொடங்கி 72 நகராட்சித் தொகுதிகளில் போட்டியிட்டு 26 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முதல் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ், சிவசேனா, பாரதீய ஜனதா கட்சிகளின் பேட்டை என்று கருதப்படும் அந்த நகராட்சியை நம் கோட்டை என மாற்றி இருக்கிறார்கள் முஸ்லிம்கள். சட்டத்திற்கு முஸ்லிம்கள் பயந்து நடக்க வேண்டும், சட்டமியற்றும் சபைகளில், பஞ்சாயத்துக்களில், பாராளுமன்றங்களில் வரக்கூடாது என்று திட்டமிட்டு காலம் காலமாக ஏமாற்றப்பட்டவர்கள் ஒற்றுமையின் அவசியத்தை அறிந்தும், சமூகச் சூழலைப் புரிந்தும், எதிர்கால சந்ததிகள் சிறப்பாக நம் கலாச்சார பெருமையோடு தலைநிமிர்ந்து வாழ்ந்திட எத்தியும், நத்தியும் துரோகம் இழைக்கும் சமுதாயத் துரோகிகளைப் புறந்தள்ளி புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கி சொந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளனர். நம்மால் முடியுமா? இது சாத்தியமா? என்று தாழ்வு மனப்பாண்மையோடு தலை சாய்க்கும் அவலத்திற்கு சாட்டை அடி கொடுத்துள்ளனர்.
தமிழக முஸ்லிம்களே! வஞ்சிக்கப்பட்ட சமுதாயங்களே! மும்பை-மலேகான் முஸ்லிம்களின் முன் உதாரணத்தை நம் உதாரணமாக்கி அரசியலில் ஆளுமை பெற்று உயர்ந்திட, சிந்தித்து செயல் முடிக்க உருவாக்கப்பட்ட அரசியல் பேரியக்கம் IDMK உங்களை அன்புடன் அழைக்கிறது.
சிந்திப்பீர், செயல் முடிக்க ஓடோடி வருவீர்.
இந்திய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 26
காங்கிரஸ் 15
ஜனதா தள் (எஸ்) 12
சிவசேனா 07
சுயேச்சைகள் 04
நகராட்சி தலைவர் : முஃப்தி முஹம்மத் இஸ்மாயில
இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
50/330, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை – 600 005
தமிழ்நாடு செல்: 9943802111, 9442815299,
9344520458, 9786011679, 9344510369

0 comments:
Post a Comment