செயல் முடிக்க
அரசியல் தீர்வை நோக்கி
புழுதியின் புத்திரனே புறப்படு!
அரசியல் தீர்வை நோக்கி
புழுதியின் புத்திரனே புறப்படு!
சுதந்திரம் பெற்று 60 ஆண்டைத் தொட இருக்கிறோம். சுகவாழ்வு பெற்றாயா? சுமைகளையே சுமந்து கொண்டு நிற்கிறாய். எல்லோரும் எல்லாம் இருக்கும் இடம் நோக்கிச் செல்ல, வெள்ளை ஆதிக்கத்ததை விரட்டிட நீ ஆற்றிய தியாகங்களைச் சற்று எண்ணிப்பார். .
அகண்ட பாரதத்திற்கு அச்சாணி கொடுத்த சமுதாயமே! நீ சீர் தூக்கி சிந்தித்து செயல் முடிக்க அரசியலில் தவறியதால் சமுதாய ஓலம் கடல் அலையாய் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நீட்டுவார் பக்கமெல்லாம் தாவும் குழந்தையாய் எந்த உத்தரவாதமும் இல்லாமல் கொடி பிடித்துக் கோஷமிட்டு கூனிக் குறுகி நிற்கிறார்கள் தலைவர்கள்.
உன் ஓட்டுக்காக உன் உரிமையைப் பற்றிப் பேசுகிறார்கள் மற்றவர்கள். கழுகு கருணையைப் பற்றி கர்ஜித்ததாம், பசுவின் கன்றுகளை அடித்து விழுங்கிய ஓநாய் வேதாந்தம் பேசியதாம், இந்தக் கூத்துக்கள் எல்லாம் உன் மேல் அரசியல் கட்சிகள் அரங்கேற்ற சமுதாயத் தலைவர்கள் வெண்சாமரம் வீசுகிறார்கள். அதற்கு இளைஞனே, தலை சாய்ந்து ஒப்புதல் அளிக்கிறாயே என்று எண்ணும் போது இதயத்தில் ஈட்டி பாய்கிறது.
வேகாதப் பொருளை வெள்ளித் தட்டில் கொடுத்தால் வீழ்ந்து வாங்குகிற சமுதாயம் அல்ல நீ. மணி மகுடங்களை மானத்திற்கு துறந்த சமுதாயம், மானம் போயின் உயிர் வாழ்தல் வீண். மன்னர் பகதூர்ஷாவிற்கு மானியம் கொடுக்க வெள்ளையன் முன் வந்த போது, விழிகள் சிவக்க யாருக்குக் கொடுக்கிறாய் மானியம் துப்புக் கெட்டவனே! தூ… என்று சொன்ன சமுதாயத்தின் வழித் தோன்றலே, உரிமை கேட்டு வஞ்சக நரியிடம் தத்தி நிற்கிறாய்.
நாங்கள் இதைச் செய்தோம், அதை முடித்தோம் என்று வார்த்தையில் பந்தல் இடுகின்றனர் சிலர். இளைஞனே! மழையைக் கொடுக்காத இடியால் என்ன பயன்? சமுதாயச் சொந்தமே! அற்ப ஆர்ப்பாட்டங்களும், போர்ப்பாட்டங்களும் தீர்வு ஆகாது. அரசியலைப் புறக்கணித்து விட்டு உரிமை என்று உரக்கப் பேசி உமியாகிப் போகாதே! அரசியல் தீர்வின் மூலம் எல்லா உரிமையையும் பெற்றிட மடை திறந்த வெள்ளமாய் அரசியல் தீர்வை நோக்கி செயல் முடிக்க இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)யில் திரண்டு வா!!
இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு
50/330, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை – 600 005
தமிழ்நாடு செல்: 9943802111, 9442815299,
9344520458, 9786011679, 9344510369

0 comments:
Post a Comment